துனீசியப் புரட்சி
2010-2011 துனீசியப் புரட்சி என்பது வடக்கு ஆப்பிரிக்காவின் துனீசிய நாட்டில் ஏகாதிபத்திய அரசின் ஆட்சிமுறைக்கு எதிராக 2010 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்டு 2011 ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டிய மக்கள் புரட்சி ஆகும். இந்த புரட்சியின் விளைவாக துனீசிய நாட்டில் ஆட்சி மற்றம் ஏற்பட்டதுடன், பரவலான வடக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய தரைக்கடல் நாடுகள் சிலவற்றிலும், ஆட்சிமாற்றம் வேண்டி மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் அளவுக்கு பெரிதும் பாதிப்பையும் இந்தப்புரட்சி ஏற்படுத்தியது.[1][2][3]
காரணங்கள்
[தொகு]1987 ஆம் ஆண்டு துனீசியக் குடியரசின் இரண்டாவது பிரதமராக நியமிக்கப்பட்டு, பின் சில நாட்களில் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் தன்னை அதிபராக அறிவித்துகொண்ட ஜயின் அல்-அபைதீன் பின் அலிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதும் இந்த போராட்டம் புரட்சியாக வெடித்தது.
இளைஞரின் தீக்குளிப்பு
[தொகு]இந்தப் போராட்டங்களை தொடங்கக் காரணமாக 26 வயது இளைஞனின் முகமது புவசீசி (Mohamed Bouazizi) என்பவர் தீக்குழித்த நிகழ்வு அமைந்தது. அவர் தனது கூட்டுக் குடும்பத்தின் எட்டு உறுப்பினர்களை சம்பாதித்து காப்பற்றும் பொறுப்பில் இருந்தார். அவரது மரக்கறி வண்டியையும் மரக்கறிகளையும் ஒரு காவல்காரர் சட்டத்துக்குப் புறம்பானது என்று அபகரித்துக் கொண்டார். இவ்வாறு இதற்கு முதலாகம் இவருக்கு நடந்தது. இவர் 10 டினார் கொடுத்து சமாளிக்கப் பாத்தார். அதற்கு அந்த காவல்காரர் அவரைஅறைந்து, அவர் முகத்தில் உமிழ்ந்தார். அவனது இறந்த தந்தையை இழித்துப் பேசினார். இதைப் பற்றி முறையீடு செய்ய முகமது மாநில தலைமையகத்துக்குச் சென்றார். அங்கு அவரை யாரும் செவி கொடுத்துக் கேக்கவில்லை. இதனால் இவர் டிசம்பர் 17, 2010 அன்று பொதுவிடத்தில் தன்னை தீமூட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வு சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படித்து புரட்சி ஏற்படத் தூண்டுகோலாக அமைந்தது.
விளைவுகள்
[தொகு]பேஸ்புக் எனப்படும் சமூக வலைதளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்கு வெளியிட்டனர். அதிபர் நாட்டை விட்டு தப்பியோடியதுடன் முடிவுக்கு வந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Willsher, Kim (27 February 2011). "Tunisian prime minister Mohamed Ghannouchi resigns amid unrest". The Guardian (London) இம் மூலத்தில் இருந்து 26 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170226020144/https://www.theguardian.com/world/2011/feb/27/tunisian-prime-minister-ghannouchi-resigns.
- ↑ "Tunisia forms national unity government amid unrest". BBC News. 17 January 2011 இம் மூலத்தில் இருந்து 19 January 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110119014933/http://www.bbc.co.uk/news/world-africa-12209621.
- ↑ "Tunisia dissolves Ben Ali party". Al Jazeera. 9 March 2011 இம் மூலத்தில் இருந்து 30 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110930125313/http://english.aljazeera.net/news/africa/2011/03/20113985941974579.html.